Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

அய்யோ எப்படியாவது தப்பிக்கனும்…தடுத்து நிறுத்திய போலீசார்… 2 லாரிகள் பறிமுதல்…!!

ராமநாதபுரம் மாவட்டத்தில் சட்ட விரோதமாக மணல் அள்ளிவந்த 2 லாரிகளை பறிமுதல் செய்த போலீசார் 2 பேரை தேடி வருகின்றனர்.

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி சர்வீஸ் சாலையில் எமனேஸ்வரம் காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்துள்ளனர். அப்போது அப்பகுதியாக வந்த மணல் அள்ளிக்கொண்டு 2 லாரிகள் வந்துள்ளது. இதனை காவல்துறையினர் நிறுத்தியதும் லாரியை ஓட்டி வந்தவர்கள் நிறுத்திவிட்டு அங்கிருந்து தப்பியோடியுள்ளனர்.

இதனையடுத்து காவல்துறையினர் 2 லாரிகளையும் கைப்பற்றி காவல்நிலையத்திற்கு கொண்டு சென்றுள்ளனர். இதனைத்தொடர்ந்து விசாரணை நடத்தியதில் மணல் அள்ளியவர்கள் சத்திரக்குடியை சேர்ந்த பிரகாஷ்குமார்(37), சென்னையை சேர்ந்த முருகவேல்(48) என்பது தெரியவந்துள்ளது. மேலும் அவர்கள் 2 பேர் மீது வழக்குப்பதிவு செய்து தேடி வருகின்றனர்.

Categories

Tech |