Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

அய்யோ..! ”புயல் VS புள்ளிங்கோ” உங்க அளப்பறைக்கு அளவே இல்லையா ?

அடுத்த ஆறு மணி நேரத்தில் நிவர் புயல் அதி தீவிர புயலாக மாறும் என்று வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்து இருக்கிறது.

வங்கக் கடலில் மையம் கொண்டுள்ள நிவர் புயலானது கடந்த ஆறு மணி நேரத்தில் மணிக்கு 11 கிலோ மீட்டர் வேகத்தில் நகருகிறது. வடமேற்கு திசையை நோக்கி நகர்ந்து வருகிறது. இது தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி இடையில் உள்ள மாமல்லபுரம் – காரைக்கால் இடையே கரையை கடக்க கூடும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில்,  அடுத்த ஆறு மணி நேரத்தில் இந்த புயலானது மேலும் தீவிர புயலாக உருவெடுத்து இன்று நள்ளிரவு அல்லது நாளை கரையை கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நேரத்தில் தமிழகத்தில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் கனமழை,  இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்திருக்கிறது. இதையடுத்து சென்னையில் நீர் ஆதாரமாக விளங்கும் செம்பரம்பாக்கம் ஏரியின் தற்போது ஆயிரம் ஆயிரம் கனஅடி அளவில் நீர் திறந்து விடப்பட்டுள்ளது. ஏற்கனவே செம்பரம்பாக்கம் ஏரி திறக்கும் போது ஏற்பட்ட வெள்ளம் பாதிப்பு பலருக்கும் நினைவில் இருக்கும் நிலையில் #ChembarambakkamLakeஎன்ற ஹேஷ்டாக் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகின்றன. குறிப்பாக புயலைக் கண்டு சென்னைவாசிகள் அஞ்ச மாட்டார்கள் என்பதை போன்ற ஒரு பதிவு வைரலாகி வருகின்றது.

Categories

Tech |