‘வலிமை’ படத்தின் ஒரு செய்தி ரசிகர்களை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திரங்கள் ஒருவராக வலம் வருபவர் நடிகர் அஜித். இயக்குனர் வினோத் இயக்கத்தில் இவர் நடித்துள்ள திரைப்படம் ”வலிமை”. போனி கபூர் தயாரித்துள்ள இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இதனையடுத்து, இந்த திரைப்படம் அடுத்த ஆண்டு பொங்கலுக்கு ரிலீஸாக உள்ளது.
சமீபத்தில், இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் விசில் தீம் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. மேலும், இந்த படத்தின் டிரைலர் மற்றும் ரிலீஸ் தேதி வெளியாகி ரசிகர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், ஒரு செய்தி ரசிகர்களை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அதன்படி, திரையரங்கில் 50 சதவீத பார்வையாளர்கள் மட்டுமே செயல்பட அனுமதி வழங்கியுள்ளதால் ரசிகர்கள் மத்தியில் இந்த அறிவிப்பு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.