உலக அளவில் அதிக அளவு பயனாளர்களால் whatsapp பயன்படுத்தப்படுகிறது. இந்த வாட்ஸ் அப் செயலி செய்திகளை பரிமாறி கொள்வதற்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. வாட்ஸ் அப்பில் தற்போது 2ஜிபி வரை உள்ள பைல்களை பகிர்ந்து கொள்ளலாம் என்பதால், பயனாளர்கள் தங்களுடைய புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பகிர்ந்து கொள்வதற்கு மிகவும் வசதியாக இருக்கிறது. அதன் பிறகு வாட்ஸ் அப் பயன்படுத்தும் நபர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் மெட்டா நிறுவனம் அவ்வப்போது புதுப்புது அப்டேட்டுகளை வழங்கி வருகிறது.
இந்நிலையில் நிறைய பேர் ஒரிஜினல் whatsapp செயலியை பதிவிறக்கம் செய்து கொள்ளாமல் கூடுதல் அப்டேட்டுகளை வழங்கும் வாட்ஸ்அப் knockoff, வாட்ஸ் அப் plus, Yo வாட்ஸ் அப் போன்றவற்றை பயன்படுத்துகிறார்கள். இந்த செயலிகளை பயன்படுத்துபவர்களின் தகவல்கள் திருடப்படுவதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது. இந்த தகவலை சைபர் பாதுகாப்பு நிபுணரான காஸ்பர்ஸ்கி அறிவித்துள்ளது. எனவே யாராவது யோ வாட்ஸ் அப், வாட்ஸ் அப் ப்ளஸ், வாட்ஸ் அப் நாக்ஆப் போன்ற செயலிகளை பயன்படுத்தினால் உடனடியாக செல்போனிலிருந்து அதை டெலிட் செய்து விடுங்கள்.
மேலும் செயலியை பாதுகாப்பாக வைத்துக் கொள்ள வேண்டும் என்றால் கூகுள் பிளே ஸ்டோரில் உள்ள அதிகாரப்பூர்வ ஆதாரங்களில் இருக்கும் வாட்ஸ் அப்பை இன்ஸ்டால் செய்து கொள்வதோடு, போலியான செயலிகள் மற்றும் அங்கீகாரம் பெறாத செயலிகள் இருந்தால் அதை உடனடியாக டெலிட் செய்து விடுங்கள். நீங்கள் எப்போதும் ஒரு செயலியை பதிவிறக்கம் செய்து கொள்ளும்போது அது உண்மைதானா என்பதையும் அதற்கான சரியான அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளதா என்பதையும் சரிபார்த்த பிறகே ஒரு செயலியை பதிவிறக்கம் செய்ய வேண்டும்.