செய்தியாளர்களிடம் பேசிய தமிழக பாஜகவின் மாநில தலைவர் அண்ணாமலை, மதுக்கடை நேரத்தை இன்னும் அதிகப்படுத்த முடியுமா ? கடைகளை அதிகப்படுத்த முடியுமா ? ஐந்தாயிரம் கடைகளை தாண்டி போய்கிட்டு இருக்கு. இந்த தெருவில் ஒரு கடையை ஓபன் பண்ணலாமா ? இந்த மாதிரியான முயற்சி ஒரு பக்கம் அரசு செஞ்சு கொண்டு, இன்னொரு பக்கம் முதலமைச்சர் ஒரு முழு நாள் முழுவதும் மீட்டிங் போட்டு, தமிழ்நாட்டில் நாங்கள் போதை கலாச்சாரத்தை ஒழிக்க போறோம் என்றால் ? எப்படி ஒழிக்க முடியும்?
டாஸ்மார்க்கில் எம்ஆர்பிக்கு மேல பத்து ரூபாய்க்கு மேல விற்கக்கூடிய மாடல் இங்கதான். எம்.ஆர்.பிக்கு மேல பத்து ரூபா விக்கிறாங்க. இவ்வளவு பிரச்சனைகள் இருக்கு. டாஸ்மாக்கை வைத்து தான் அரசியல் கட்சி நடத்த வேண்டும் என்று திமுக தீர்மானித்து விட்டால், அதற்கு எதற்காக மக்களை பகடைக்காய் ஆக்குகிறீர்கள்.
கனிமொழி அக்கா சொல்லியிருந்தாங்க…. நாங்க ஆட்சிக்கு வந்த உடனே, திமுககாரங்கற வச்சு இருக்கின்ற மது ஆலையை மூடி விடுவோம் என்று, மூடி விட்டார்களா ? எனக்கு தெரிந்து உற்பத்தி அதிகபடுத்தி இருக்காங்க. நான் முதலமைச்சரான உடனே டாஸ்மாக்க மூடுவேன்னு சொன்னாங்க. 1 கடையை மூடுனீங்களா ? தமிழ்நாட்டில் ஆட்சிக்கு வந்து 15 மாதம் ஆச்சு. ஒரு கடையை மூடுனீங்களா ? ஆனா பத்து மணிக்கு மேல கடையை தொறக்கறீங்க.
நாளைக்கு காலைல நீங்க மூடுங்கன்னு சொல்லல. ஒரு தொலைநோக்கு பார்வையே இல்லாம இருக்கீங்க. போன வருஷம் 34,000 கோடி வருமானம், இந்த வருஷம் 38 ஆயிரம் கோடி வருமானம், அடுத்த வருஷம் 45 ஆயிரம் கோடிக்கு போய் நிக்க போது… எப்படியும் இது குடிகார மாநிலம் என்கின்ற பெயரை நாம் வாங்க தான் போறோம். இந்தியாவிலேயே மதுவை விற்று அதன் மூலமாக அதிகப்படியான வருமானம் வருவது தமிழகம், கேரளா நாமதான் முதல்ல இருக்கோம்.
விவசாய மக்கள் கேக்குறாங்க கல் இறக்க கேக்குறாங்க. அதுல என்ன தப்பு ? கல்லை இறக்குவதில் என்ன தவறு ? எந்த தவறும் இல்லை. ஏதோ கெமிக்கல்ல குடிச்சு யார் யாருக்கோ எதோ ஆகுது? விவசாய பெருக மக்கள் கல்லை இறக்குவதில் என்ன பிரச்சனை? அதையெல்லாம் கொண்டு வாங்க. அதை எல்லாம் மூடினது யாரு ? அத தொறந்தது யாரு ? அதெல்லாம் தமிழக மக்கள் மக்க கூடாது. எந்த கட்சி முடிச்சு ? எந்த கட்சி துறந்துச்சு ? என விமர்சித்தார்.