மாஸ்டர் திரைப்படம் திரையரங்கில் வெளியாக இன்னும் இரண்டு நாட்கள் உள்ள நிலையில் அதற்கு முன்னதாகவே இணையத்தில் வெளியாகி உள்ளது.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், விஜய்சேதுபதி, மாளவிகா மோகன், ஆண்ட்ரியா உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் மாஸ்டர். 2020ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் திரைக்கு வர இருந்த நிலையில் இந்த படம் கொரோனா காரணமாக தள்ளிப்போனது. அனிருத் இசையில் படத்தின் பாடல்கள் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. அதேபோல் வசனமே இல்லாமல் வெளியான டீசரும், டிரைலரும் எதிர்பார்ப்பை தூண்டியது.
இந்நிலையில் தமிழகத்தின் கொரோனா குறைந்ததை அடுத்து 2021 ஆம் ஆண்டு பொங்கலுக்கு படத்தை திரைக்கு கொண்டுவர படக்குழுவினர் முடிவு செய்திருந்த நிலையில் மத்திய அரசு மற்றும் உயர் நீதிமன்றத்தின் அறிவிப்பால் 50% இருக்கைகள் உடன் அனுமதி வழங்கப்பட்டது. இந்த படத்திற்கு பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டிருந்தது. இன்னும் மாஸ்டர் திரைப்படம் வெளியாவதற்கு இரண்டு நாட்கள் உள்ள நிலையில் இணையத்தில் வெளியாகி உள்ளது. படக்குழு மற்றும் திரையரங்கு உரிமையாளர்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.