உத்தரப்பிரதேச மாநிலத்தில் சித்தாப்பூர் என்ற இடத்தில் திருமண நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றுள்ளது. இந்த திருமண நிகழ்ச்சியில் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் உட்பட மொத்தம் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டுள்ளனர். இதையடுத்து முகூர்த்தம் முடிந்த பிறகு எல்லோரும் சாப்பிட சென்றுள்ளனர். அப்போது விருந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தபோது உறவினர்கள் ஒருவர் பின் ஒருவராக மயக்கமடைந்து கீழே விழுந்துள்ளனர். இதையடுத்து அங்கிருந்த சிலர் அவர்களை மருத்துவமனையில் கொண்டு சென்றுள்ளார்.
தொடர்ந்து 50 பேர் மயக்கமடைந்த நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இதையடுத்து அவர்களை பரிசோதித்த மருத்துவர்கள் திருமணவிழாவில் செய்யப்பட்ட உணவில் விஷம் கலந்து உள்ளதாக அதிர்ச்சி தகவலை தெரிவித்துள்ளனர். இதையடுத்து திருமண விழாவிற்கு சம்பந்தப்பட்டவர்கள் காவல்நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர். மேலும் காவல்துறையினர் இதுகுறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். கல்யாண விருந்தில் விஷம் கலந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.