Categories
மாநில செய்திகள்

அச்சச்சோ! வாயை கொடுத்து வசமாக சிக்கிய ரஜினி…. ஆணைய அறிக்கையில் பகீர்….. தமிழக அரசியலில் திடீர் பரபரப்பு…..!!!!

தமிழக சட்டப்பேரவையில் நேற்று தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பான அருணா ஜெகதீசன் அறிக்கை மற்றும் ஜெயலலிதா மரணம் தொடர்பான ஆறுமுகசாமியின் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. கடந்த 2018-ம் ஆண்டு தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்தப் போராட்டத்தில் திடீரென வன்முறை வெடித்ததாக கூறி போலீசார் துப்பாக்கி சூடு சம்பவத்தில் ஈடுபட்டனர். இதில் 13 பேர் பலியான நிலையில், அருணா ஜெகதீசன் தலைமையில் குழு அமைக்கப்பட்டு விசாரணை மேற்கொள்ளப் பட்டது. இந்நிலையில் அருணா ஜெகதீசனின் அறிக்கையில் நடிகர் ரஜினிகாந்தின் பெயர் குறிப்பிடப் பட்டிருந்தது தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அதாவது தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்திற்கு பிறகு நடிகர் ரஜினிகாந்த் தூத்துக்குடிக்கு நேரில் சென்று பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் கூறினார். அதன்பிறகு செய்தியாளர்களை சந்தித்து பேசிய ரஜினிகாந்த் ஸ்டெர்லைட் ஆலையில் பிரச்சனை ஏற்பட்டதற்கு முக்கிய காரணம் சமூக விரோதிகள் தான் என்று கூறினார். அதோடு விமான நிலையத்தில் வைத்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய ரஜினி காவல்துறையினர் மீது சமூகவிரோதிகள் மட்டுமே தாக்குதல் நடத்தியுள்ளனர் என்றும், தொடர்ந்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டால் தமிழ்நாட்டு சுடுகாடாக மாறிவிடும் என்று கோபமாக பேசியிருந்தார்.

இதனால் தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தப்பட்ட போது அருணா ஜெகதீசன் ஆணையம் தரப்பில் நடிகர் ரஜினிகாந்துக்கு சம்மன் அனுப்பப்பட்டது. இதற்கு ரஜினிகாந்த் எழுத்துப் பூர்வமாக தன்னுடைய பதிலை அனுப்பியிருந்தார். அதில் கூறியிருந்ததாவது, ஸ்டெர்லைட் ஆலை வன்முறை குறித்து எனக்கு எதுவுமே தெரியாது. நான் சமூகவிரோதிகள் தான் வன்முறையை ஏற்படுத்தி இருக்கலாம் என்று நினைத்தேன். அது ஒரு யூகமே தவிர மற்றபடி எனக்கு எந்த ஒரு சமூக விரோதியையும் தெரியாது என குறிப்பிடப் பட்டிருந்தது.

மேலும் இது குறித்து அருணா ஜெகதீசனின் அறிக்கையில் நடிகர் ரஜினிகாந்த் தனக்கு எந்த ஒரு சமூக விரோதியையும் தெரியாது என்று கூறிய நிலையில் வன்முறைக்கு காரணம் சமூக விரோதிகள் தான் என்று செய்தியாளர்களுக்கு பேட்டி கொடுத்தார். சமூகத்தில் பிரபலமானவர்களாக இருப்பவர்கள்  ஒரு கருத்தை தெரிவிக்கும் போது அது உண்மைதானா என்பதை யோசித்து ஆராய்ந்துதெரிவிக்க வேண்டும். அதோடு பிரபலங்களாக இருப்பவர்கள் மிகவும் பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும் என குறிப்பிடப்பட்டிருந்தது. இது தற்போது தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |