தென்கிழக்கு வங்கக்கடலில் புதிய குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது என்று சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது.
சென்னை வானிலை மையம் கூறியிருப்பதாவது: தென்கிழக்கு வங்கக்கடலில் புதிய குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது.காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும்.
புதிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் தமிழக கடற்கரை நோக்கி வரும்.புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி வலுப்பெற்று புயலாக மாறினால் மாலத்தீவு வழங்கிய ‘புரெவி’ என பெயர் வைக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.