Categories
கரூர் மாவட்ட செய்திகள்

ஐயோ! குடியை நிறுத்த நினைச்சோம்…. நடுக்கத்தால் இப்படி ஆயிருச்சே…. கதறும் குடும்பத்தினர்…!!

கரூர் நீலிமேடு என்ற பகுதியில் வசிப்பவர் சரவணன். இவர் அரசு மதுபான கடை ஒன்றை நடத்தி வந்துள்ளார். இதனால் இவருக்கு மது பழக்கம் அதிகமாக இருந்துள்ளது. இவருக்கு மனைவி மற்றும் 4 வயதில் ஒரு மகள் உள்ளார். இவர் குடிப்பழக்கத்துக்கு அடிமையானதால் அவருடைய உடல்நிலை மோசமாகி அடிக்கடி வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் வயிற்று வலியின் காரணமாக கரூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மேலும் அவருடைய குடும்பத்தினரும் எப்படியாவது குடியை நிறுத்திவிட வேண்டும் என்று திட்டமிட்டுள்ளனர்.

இந்நிலையில் சம்பவத்தன்று மருத்துவமனை மாடிக்கு சென்ற சரவணகுமார் குடிக்காமல் இருந்த காரணத்தினால் நடுக்கம் ஏற்பட்டு மாடியிலிருந்து கீழே விழுந்து பலியாகியுள்ளார். இதுகுறித்து காவல்துறை தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் இவருக்கு குடிபோதை மறுவாழ்வு மையம் மூலமாக கவுன்சில் கொடுத்திருந்தால் இந்த முடிவு ஏற்பட்டிருக்காது என்று  அவருடைய உறவினர்கள் தெரிவித்துள்ளனர். குடிக்காமல் இருந்த காரணத்தினால் நடுக்கம் ஏற்பட்டு உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |