Categories
சினிமா தமிழ் சினிமா

அச்சச்சோ! என்னாச்சு…. நயன்-விக்கி குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதி….? அதிர்ச்சியில் ரசிகர்கள்….!!!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வரும் நயன்தாராவும், இயக்குனர் விக்னேஷ் சிவனும் கடந்த ஜூன் மாதம் 9-ம் தேதி மகாபலிபுரத்தில் வைத்து பிரம்மாண்டமாக திருமணம் செய்து கொண்டனர். இந்த தம்பதிகளுக்கு தற்போது இரட்டை ஆண் குழந்தைகள் பிறந்துள்ளதாக சமீபத்தில் இயக்குனர் விக்னேஷ் சிவன் அறிவித்தார். இதைக் கேள்விப்பட்ட ரசிகர்கள் மற்றும் திரையுலக பிரபலங்கள் என பலரும் வாழ்த்துக்களை தெரிவித்தாலும், திருமணம் ஆகி 4 மாதத்தில் எப்படி குழந்தை என்று பல்வேறு தரப்பினரும் கேள்வி எழுப்பி உள்ளதால், இரட்டை குழந்தை விவகாரம் தற்போது பெரும் சர்ச்சையாக மாறியுள்ளது. அதன் பிறகு வாடகை தாயின் மூலமாக நயன்தாரா குழந்தை பெற்றுள்ளதாக தகவல் வெளியானதால் நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவனிடம் உரிய முறையில் விசாரணை நடத்தப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

இந்நிலையில் நயன் மற்றும் விக்கியின் இரட்டை குழந்தைகள் குறை பிரசவத்தில் பிறந்துள்ளதாகவும், திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் தற்போது மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக ஒரு புதிய தகவல் வெளியாகியுள்ளது. இந்த தகவலை கேள்விப்பட்ட ரசிகர்கள் மிகவும் அதிர்ச்சிக்கு ஆளாகியுள்ளனர். மேலும் நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவனின் குழந்தைகள் நலமுடன் தான் இருக்கிறார்கள் என்பதை உறுதிப்படுத்தும் விதமாக இயக்குனர் விக்னேஷ் சிவன் ஒரு பதிவை வெளியிட வேண்டுமென ரசிகர்கள் பலரும் இணையத்தில் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

Categories

Tech |