Categories
உலக செய்திகள்

‘ஊர் சுத்தி பாக்கணுமா’…. “தாராளமா எங்க நாட்டுக்கு வாங்க ” …! ஆனா ஒரு கண்டிஷன் …!!!

தடுப்பூசி செலுத்தி கொண்டவர் பிரான்சில் உள்ள சுற்றுலா தளங்களை பார்க்க அந்நாட்டு அரசு அனுமதி வழங்கியுள்ளது.

கடந்த ஆண்டு உலகம் முழுவதும் பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்திய கொரோனா  வைரஸ் இன்றளவும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால்  தடுப்பூசி போடும் பணிகளும் அனைத்து நாடுகளிலும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இந்நிலையில் பிரான்ஸ் நாட்டில் உள்ள சுற்றுலா தலங்களை பார்ப்பதற்காக அமெரிக்கர்கள் உட்பட வெளிநாடு சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஆனால் சில கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக சுற்றுலாப் பயணிகள் அனைவரும் கொரோனா தடுப்பூசிகளை  முழுமையாக செலுத்தி இருக்க வேண்டும் .அத்துடன் தடுப்பூசி செலுத்தியதற்கான ஆதாரத்தையும் வைத்திருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும்  வெளிநாடுகளில் அங்கீகரிக்கப்பட்ட பைசர், மொடெர்னா, ஆஸ்ட்ராசெனகா மற்றும் ஜான்சன் அண்ட் ஜான்சன்  போன்ற தடுப்பூசிகளை செலுத்தியிருக்க வேண்டும். மேலும் பிரான்ஸிலுள்ள அமெரிக்க தூதரகங்கள், முழுமையாக தடுப்பூசி செலுத்திக் கொண்ட அமெரிக்கர்கள் மற்றும் 11 வயதுக்கு கீழ் உள்ள சிறார்கள் ஆகியோருக்கு மட்டுமே சுற்றுலா தளங்களை காண பிரான்சுக்கு வருவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அத்துடன் அவர்கள் தங்களைத்  தனிமைப்படுத்திக் கொள்ளத் தேவையில்லை என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.மேலும்  சுற்றுலா பயணிகள் பிரான்சுக்கு வருவதற்கு முன்பாக 72 மணி நேரத்திற்கு முன் அல்லது 48 மணி நேரத்திற்கு முன்பாக கொரோனா  பரிசோதனை செய்து, தங்களுக்கு தொற்று இல்லை என்பதற்கான ஆதாரத்தை சமர்ப்பிக்க வேண்டும்  என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |