Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

இவ்வளவு பேரை கைது பண்ணிட்டாங்க…? வெளியில் போகாதீங்க…. போலீஸ் சூப்பிரண்டின் எச்சரிக்கை….!!

திருவாரூரில் ஊரடங்கின் போது சுற்றித்திரிபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

தமிழகத்தில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்த 31-ஆம் தேதி வரை கட்டுப்பாடுகளுடன் கூடிய முழு ஊரடங்கை முதல்வர் திரு. முக. ஸ்டாலின் அறிவித்துள்ளார். இதனால் திருவாரூர் மாவட்டத்தில் போலீஸ் சூப்பிரண்டு கயல்விழி உத்தரவின்படி, பல்வேறு இடங்களில் சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு காவல் துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். எனவே ஊரடங்கு கட்டுப்பாடுகளை மீறி வெளியில் சுற்றித் திரிபவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து அவர்களது வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு வருகின்றது.

இதுகுறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கயல்விழி கூறியபோது, மாவட்டத்தில் கடந்த 3 நாட்களாக காவல்துறையினர் நடத்திய வாகன சோதனையில் அத்தியாவசிய தேவையின்றி வெளியில் வாகனங்களில் சுற்றித்திரிந்து 830 பேர் மீது வழக்குப்பதிவு செய்து அவர்களை கைது செய்துள்ளனர். மேலும் அவர்களது வாகனங்களை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். இதேபோன்று முக கவசம் அணியாமலும், சமூக இடைவெளியை கடைப்பிடிக்காமலும் வெளியில் சுற்றித்திரிந்த 365 பேர் மீது காவல்துறையின் வழக்குப்பதிவு செய்ததோடு அவர்களிடமிருந்து மொத்தம்  82 ஆயிரத்து 900 ரூபாய் அபராதம் வசூலித்துள்ளனர்.

எனவே பொதுமக்கள் அனைவரும் கொரோனா தொற்றின் அபாயத்தை உணர்ந்து ஊரடங்கு கட்டுப்பாடுகளை பின்பற்ற வேண்டும் என்றும் அத்தியாவசிய தேவையின்றி வெளியில் சுற்றித் திரிய வேண்டாம் என்றும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கயல்விழி கூறியுள்ளார். மேலும் இதுபோன்ற விதிமுறைகளை மீறுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கயல்விழி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Categories

Tech |