Categories
டெக்னாலஜி பல்சுவை மாநில செய்திகள்

ஊரடங்கால் இணைய விளையாட்டிற்கு அடிமையாகும் சிறுவர்கள்… திணறும் பெற்றோர்கள்..!!

ஊரடங்கு உத்தரவால் வீட்டில் முடங்கி கிடக்கும் சிறுவர்கள் இணைய விளையாட்டிற்கு அடிமையாகி வருவது பெற்றோர்களை சங்கடத்திற்கு உள்ளாக்கியது.

நகரங்களில் மட்டுமல்லாது தற்போது கிராமங்களில் இருக்கும் சிறுவர்களின் மத்தியில் மொபைல் விளையாட்டுகள் பிரபலமாகி உள்ளது. முதலில் பொழுதுபோக்கிற்காக விளையாட ஆரம்பித்தவர்களை  இந்த இணைய விளையாட்டுகள் தற்போது தன்வசப்படுத்திக் கொண்டுள்ளது. வீட்டிலேயே அடைந்து கிடப்பதால் சிறுவர்களும் இதற்கு அடிமையாகிக் கிடக்கின்றனர்.

உயர் தொழில்நுட்பம், உயர்தர கிராபிக்ஸ் காட்சிகளால் ஈர்க்கப்படும் சிறுவர்கள் இதிலேயே மூழ்கிப் போகின்றனர். அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்பது போல இணைய விளையாட்டில் மூழ்கி கிடக்கும் சிறுவர்களை மீட்பது எப்படி என்று தெரியாமல் பெற்றோர்கள் தவிக்கும் நிலை ஏற்பட்டிருக்கிறது.

Categories

Tech |