Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

வெளியில் போகாதீங்க…. நடைபெறும் தீவிர சோதனை…. போலீஸ் சூப்பிரண்டின் அதிரடி….!!

திருப்பத்தூரில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சோதனை மையங்களுக்கு சென்று ஆய்வு செய்துள்ளார்.

தமிழகத்தில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்த மீண்டும் ஒரு வாரம் முழு ஊரடங்கை தமிழக முதல்வர் திரு. முக. ஸ்டாலின் அறிவித்துள்ளார். இந்நிலையில் திருப்பத்தூரில் அமைக்கப்பட்டுள்ள சோதனைச்சாவடிகளை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார் ஆய்வு செய்துள்ளார். அப்போது அவ்வழியாக வாகனங்களில் வருபவர்களை போலீஸ் சூப்பிரண்டு நிறுத்தி உரிய ஆவணங்கள்  வைத்திருப்பவர்களை மட்டும் திருப்பி அனுப்பியுள்ளார். இதனையடுத்து அத்தியாவசிய தேவையின்றி வெளியில் சுற்றித் திரிபவர்களை போலீஸ் சூப்பிரண்டு நிறுத்தி அறிவுரை வழங்கி திருப்பி அனுப்பியுள்ளார்.

மேலும் புதூரில் சோதனை மையத்தின் வழியாக சென்ற அரசு பேருந்துகளை போலீஸ் சூப்பிரண்டு நிறுத்தி ஆய்வு செய்துள்ளார். இவ்வாறு போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளுக்கு சென்று முழு ஊரடங்கு குறித்து ஆய்வு செய்துள்ளார். இதேபோன்று வாணியம்பாடி துணை போலீஸ் சூப்பிரண்டு பன்னீர்செல்வம் தலைமையில், காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டு வந்துள்ளனர். அப்போது ஊரடங்கு நேரத்தில் வெளியில் வாகனங்களில்  சுற்றித்திரிந்த 50- க்கும் மேற்பட்டவர்களை காவல்துறையினர் நிறுத்தி அவர்களது வாகனங்களை பறிமுதல் செய்துள்ளனர்.

Categories

Tech |