ஊரடங்கின் விதிமுறைகளை மீறி வியாபாரம் செய்த 3 கடைகளை பூட்டி அதிகாரிகள் சீல் வைத்தனர்.
தமிழகத்தில் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை பரவி வரும் நிலையில் தமிழக அரசு ஊரடங்கை அமல்படுத்தியது. இந்நிலையில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள வாலாஜாபேட்டை பகுதியில் ஊரடங்கு நேரத்திலும் அரசு அனுமதி அளிக்காத கடைகளில் விதிமுறைகளை மீறி வியாபாரம் நடைபெறுவதாக வாலாஜாபேட்டை நகராட்சி ஆணையாளர் சதீஷ் குமாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின்படி நகராட்சி ஆணையாளரின் தலைமையில் காவல்துறையினர் அங்கு விரைந்து சென்று தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர்.
அப்போது காவல்துறையினர் அங்கு விதிமுறைகளைை மீறி அனுமதி பெறாமல் திறந்து வைத்து வியாபாரம் செய்த மூன்று கடைகளை பார்த்துள்ளனர். இதனை அடுத்து கடை உரிமையாளர்கள் மீது வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அவர்களுக்கு 4,500 ரூபாய் அபராதம் விதித்து உத்தரவிட்டனர்.மேலும் அதிகாரிகள் விதிமுறைகளை மீறிய குற்றத்திற்காக 3 கடைகளையும் பூட்டி சீல் வைத்தனர்.