Categories
உலக செய்திகள்

அரசின் துணிச்சலான முடிவு…! 65,000பேர் உயிர் தப்பினர்… மலைக்க வைக்கும் புள்ளி …!!

சுவிட்சர்லாந்தில் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கால் கொரோனாவிலிருந்து காப்பாற்றப்பட்ட உயிர்களின் எண்ணிக்கையை பல்கலைக்கழகம் ஒன்று வெளியிட்டுள்ளது. 

கொரோனா பரவலை தடுக்கும் விதமாக கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் இருந்து தற்போது வரை தளர்வுகளுடன்  கூடிய ஊரடங்கு சுவிட்சர்லாந்தில் அமலில் இருந்து வருகிறது. உணவகங்கள், திரையரங்குகள் மற்றும் கடைகள் என பொது மக்கள் அதிகமாக கூடும் அனைத்து இடங்களும் அடைக்கப்பட்டுள்ளது. ஆனால் அரசின் இந்த நடவடிக்கையால் பெரும்பாலான பொதுமக்கள் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். தற்போது சுவிட்சர்லாந்து அரசின் இந்த ஊரடங்கு நடவடிக்கை குறித்து “Della Svizzera Italina” என்ற பல்கலைகழகம் ஆய்வு மேற்கொண்டது.

அந்த ஆய்வில், “சுவிட்சர்லாந்தில் கொரோனா பரவலை தடுக்கும் விதமாக அமல்படுத்தப்பட்ட முதல் கட்ட ஊரடங்கால்  கொரோனா நோயிலிருந்து ஆயிரக்கணக்கான மக்கள் காப்பாற்றபட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த ஆய்வு  கூறுவது என்னவென்றால், கடந்த ஆண்டு மார்ச் முதல் ஜூன்  மாதம் வரையான ஊரடங்கால்  30,000 பேர் காப்பாற்றப்பட்டுள்ளனர் என்று தெரியவந்துள்ளது.

இதுமட்டுமன்றி ஊரடங்கு அமலுக்கு கொண்டு வருவதற்கு முன்பு  அரசின் நடவடிக்கைகளுக்கு கட்டுப்பட்டு சமூக இடைவெளி மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் சரியான முறையில் செயல்படுத்தப்பட்டதால் 30,000 உயிர்கள் கொரோனாவிலிருந்து பாதுகாக்கப்பட்டுள்ளது. மேலும் சுவிட்சர்லாந்தில் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கால் மட்டுமே  65,000  மக்கள் காப்பாற்றப்பட்டுள்ளனர்”.  மற்றொருபுறம்  டிசினோ ஆராய்ச்சிளர்கள் ஊரடங்கால் ஏற்பட்ட பொருளாதார நன்மை குறித்து ஆய்வு முடிவுகளை வெளியிட்டுள்ளனர்.

அதில் “ஒருவர் தமது ஆயுளை ஒரு ஆண்டிற்கு நீட்டிக்க எவ்வளவு தொகையை செலவிட வேண்டும் என்பதை கண்டறிந்துள்ளனர். அதனடிப்படையில் சுவிட்சர்லாந்தில் உள்ள குடிமகன் ஒருவர் தனது ஆயுளை ஒரு வருடத்திற்கு நீட்டிக்க வேண்டும் என்றால் 6.7 மில்லியன் பிராங்குகள் தோராயமாக செலவிட வேண்டும் என்று கணக்கிட்டுள்ளனர். அந்த வகையில் சுவிட்சர்லாந்து அரசு  100 மில்லியன் பிராங்குகள் பொருளாதார ஆதாயம் பெற்றுள்ளதாக” ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர்.

Categories

Tech |