ஊராட்சி மன்ற தலைவரை தரையில் அமர வைத்த விவகாரம்.
சிதம்பரம் அருகில் தெற்குதிட்டை ஊராட்சி மன்ற தலைவரை தரையில் அமர வைத்து விவகாரத்தில் பாதிக்கப்பட்ட ஊராட்சி மன்ற தலைவரின் உயிருக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது என்றும் அவருக்கு தேவையான பாதுகாப்பு அளிக்கப்படும் என்று மாவட்ட ஆட்சியர் திரு சந்திரசேகரன் சகாமுரி உறுதிபடத் தெரிவித்துள்ளார்.
சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்ட ஊராட்சி மன்ற தலைவர் உள்ளிட்டோரிடம் நேரில் விசாரணை மேற்கொண்ட பின் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர் தலைமறைவாக உள்ள துணைத் தலைவர் மோகன்ராஜை தேடும் பணி நடைபெற்று வருவதாக தெரிவித்தார்.