நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள கோபுராஜபுரம் ஊராட்சி பகுதியில் இருக்கும் அங்கன்வாடி மையத்தில் நீலாம்பாள் என்பவர் ஊட்டச்சத்து பணியாளராக வேலை பார்த்து வருகிறார். இங்கு உதவியாளர் பணியிடம் காலியாக இருக்கிறது. இதனால் அப்பகுதியில் வசிக்கும் மகேஸ்வரி(38) என்ற பெண்ணை நீலாம்பாள் தனக்கு உதவியாக வைத்துள்ளார். இந்நிலையில் கோபுராஜபுரம் ஊராட்சி மன்ற தலைவி உமா மகேஸ்வரியின் கணவர் ராஜேஷ் என்பவர் நீலாம்பாளை செல்போன் மூலம் தொடர்பு கொண்டு ஆதிதிராவிடர் சமூகத்தை சேர்ந்த மகேஸ்வரியை வேலைக்கு சேர்க்க கூடாது என கூறியுள்ளார்.
அந்த செல்போன் பதிவை நீலாம்பாள் மகேஸ்வரியிடம் காண்பித்துள்ளார். இதுகுறித்த ஆடியோ சமூக வலைதளத்தில் வேகமாக பரவியது. இந்நிலையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நாகை தொகுதி செயலாளர் அறிவழகன், வடக்கு ஒன்றிய அமைப்பாளர் அரவிந்த்வளவன் ஆகியோர் திட்டச்சேரி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் ரமேஷை கைது செய்தனர்.