Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

முறைகேடு நடக்கிறது…. வேட்பாளர்கள் போராட்டம்…. போலீஸ் பேச்சுவார்த்தை….!!

ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு மறுவாக்கப்பதிவு செய்யுமாறு பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள அரக்கோணம் உட்பட 4 ஊராட்சிகளில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் அரசு பள்ளிகளில் வாக்குச்சாவடி மையம் அமைக்கப்பட்டு வாக்குப்பதிவு தொடங்கப்பட்டிருக்கிறது. இதில் பெண்கள் மற்றும் ஆண்கள் வரிசையாக நின்று தங்களது வாக்குகளை செலுத்தி வருகின்றனர். இதனால் வாக்கு சாவடி மையங்களில் காவல்துறையினர் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

அதன்பின் ஊராட்சி தலைவர் பதவிக்கு இரண்டு பெண்கள் போட்டியிட்ட நிலையில் அதில் ஒரு வேட்பாளரின் உறவினர் தேர்தல் நடத்தும் அலுவலர் என்பதினால் அவருக்கு சாதகமாக செயல்படுவதாக புகார் வந்துள்ளது. பின்னர் வாக்காளர்கள் வாக்களித்த வாக்குச்சீட்டுகளை சரியான முறையில் மடிக்காமல் தலைகீழாக இரண்டு சின்னங்களில் முத்திரை பதியும்படி வைத்திருந்ததாக அவரிடம் வேட்பாளர் தரப்பில் பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.

அதற்குப் பிறகு நெடுஞ்சாலையில் பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதுபற்றி தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது வேட்பாளர் ஒருவர் ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு மறுவாக்குப்பதிவு நடத்த வேண்டும் என அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு தேர்தல் வாக்குப் பெட்டிகளை அனுப்ப விடாமல் நுழைவு வாயில் முன்பாக அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டுள்ளனர்.

Categories

Tech |