ஊராட்சி வளர்ச்சிப் பணிக்காக 10 லட்ச ரூபாய் காசோலையை கலெக்டர் அமர்குஷ்வாஹா வழங்கியுள்ளார்.
திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆத்தூர் குப்பம் ஊராட்சியில் பொதுமக்களுக்கு 100% கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த ஊராட்சியில் வளர்ச்சி பணிகளை மேற்கொள்ள 10 லட்சத்துக்கான காசோலையை ஊராட்சி மன்ற தலைவர் செந்தில்குமாரிடம் மாவட்ட கலெக்டர் அமர்குஷ்வாஹா வழங்கியுள்ளார்.
அப்போது மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவர் என்.கே.ஆர் சூரியகுமார், ஒன்றிய கவுன்சிலர் சாமன்னன், ஊராட்சி மன்ற துணை தலைவர் ராஜ்குமார் மற்றும் வார்டு உறுப்பினர்கள், அரசு அதிகாரிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டுள்ளனர்.