Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

ஊராட்சி தலைவர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி போராட்டம்…!!

திருவள்ளூர் அருகே குடிநீர் தட்டுப்பாட்டை நீக்க நடவடிக்கை எடுக்காத ஊராட்சி தலைவர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி கிராம மக்கள் போராட்டம் நடத்தினர்.

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்த ஏருசிவன் ஊராட்சியில் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். 6 கிராமங்களை உள்ளடக்கிய இந்த ஊராட்சியில் தலைவர் வெங்கடகிருஷ்ணன், ஊராட்சி செயலாளர் ரமேஷ் அலுவலகத்துக்கு வருவதில்லை என்றும் கடந்த ஆறு மாத காலமாக அலுவலகம் பூட்டி இருப்பதாகவும் புகார் கூறப்படுகிறது. இதனால் அடிப்படை வசதிகள் இன்றி இப்பகுதி மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.

குறிப்பாக குடிநீர், சாலை வசதி, தெருவிளக்கு பிரச்சனைகளை ஊராட்சி மன்ற அலுவலகத்தில் தெரிவிக்க முடியவில்லை. இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் வரை புகார் அளித்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரமடைந்த கிராம மக்கள் ஊராட்சி மன்ற அலுவலகத்தை முற்றுகையிட்டு ஊராட்சி மன்ற தலைவர், ஊராட்சி செயலாளர் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் குடிநீர், தெருவிளக்கு, சாலை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து தரக் கோரியும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Categories

Tech |