அட்டகாசம் செய்த ஒற்றை காட்டு யானையை வனத்துறையினர் விரட்டியுள்ளனர்.
திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள கொடைக்கானல் சுற்றுவட்டாரப் பகுதியில் பல்வேறு கிராமங்கள் வனப்பகுதிக்கு அருகில் அமைந்துள்ளது. இதனால் வனப்பகுதியில் இருக்கும் காட்டெருமை, காட்டுயானைகள் உள்ளிட்ட பல்வேறு விலங்குகள் ஊருக்குள் புகுந்து மக்களை அச்சுறுத்தி வருவது வாடிக்கையாக உள்ளது. இந்நிலையில் பேத்துப்பாறை ஊருக்குள் புகுந்த ஒற்றை காட்டு யானை அட்டகாசம் செய்ததை பார்த்த மக்கள் பயத்தில் ஓட்டம் பிடித்துள்ளனர்.
இது குறித்து தகவலறிந்த வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றுள்ளனர். அதன்பின் ஊருக்குள் புகுந்த ஒற்றை காட்டு யானையை வனத்துறையினர் பட்டாசுகள் வெடித்து அங்கிருந்த அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்டியுள்ளனர். இதனால் அப்பகுதியில் சற்று நேரம் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.