Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

“ஊட்டச்சத்து மாத விழா” வரையப்பட்ட ரங்கோலி கோலங்கள்…. கலெக்டரின் செயல்….!!

ஊட்டச்சத்து விழிப்புணர்வுக்கான பேரணியை கலெக்டர் கொடிய காட்டி தொடங்கி வைத்தார்.

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள கலெக்டர் அலுவலக வளாகத்தில் சமூகநலம் மற்றும் மகளிர் உரிமை துறையின் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்டம் சார்பாக தேசிய ஊட்டச்சத்து மாத விழா ஒன்று நடைபெற்றது. அந்த விழாவில் 100-க்கும் மேற்பட்ட அங்கன்வாடி பணியாளர்கள், மேற்பார்வையாளர்கள் மற்றும் குழந்தை வளர்ச்சித் திட்ட அலுவலர்கள்  கலந்துகொண்டு கலெக்டர் அலுவலக வளாகம் முன்பு ரங்கோலி கோலங்கள் பல வண்ணங்களில்  வரைந்து இருந்தனர். மேலும் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்டங்கள் மூலமாக ஊட்டச்சத்து நிறைந்த பாரம்பரிய உணவு வகையான கோதுமை, ராகி, வரகு, குதிரைவாலி,அனைத்து திணை வகைகள் மற்றும் மூலிகை பொருட்களான அரியவகை சத்தான உணவு பொருட்கள் கண்காட்சிக்காக வைக்கப்பட்டிருந்தது.

இந்த நிகழ்ச்சியை மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் தொடங்கி வைத்து ஆய்வு மேற்கொண்டார். இதனையடுத்து ஊட்டச்சத்து விழிப்புணர்வு அடங்கிய பல வண்ணங்களில் போடப்பட்டிருந்த ரங்கோலி கலர் கோலங்களை கலெக்டர் பார்வையிட்டார். அதன்பின் பாரம்பரிய உணவு வகையான சாமை, கோதுமை, ராகி ஆகியவற்றில் செய்யப்பட்டிருந்த உணவு வகைகளை ஒவ்வொன்றாக கலெக்டர் ருசித்து சாப்பிட்டார். இதனைத்தொடர்ந்து கலெக்டர் ஊட்டச்சத்து விழிப்புணர்வு குறித்த உறுதிமொழியை வாசித்தார். அதனை எல்லோரும் வாசித்து ஏற்றுக்கொண்டனர். அதன்பின் கலெக்டர் ஊட்டச்சத்து விழிப்புணர்வுக்கான பேரணியை கொடி காட்டி தொடங்கி வைத்தார். அப்போது மாவட்ட வருவாய் அலுவலர் மீனா பிரியதர்ஷினி மற்றும் அரசு அலுவலர்கள் பெரும்பாலானோர் கலந்து கொண்டனர்.

Categories

Tech |