Categories
உலக செய்திகள்

ஊதிய உயர்வு வழங்க முடிவு…. பயனடையும் பொதுமக்கள்…. பிரித்தானியா பிரதமர் திட்டம்….!!

பொதுமக்களின் ஊதியத்தில் உயர்வை வழங்க பிரித்தானியா பிரதமர் போரிஸ் ஜான்சன் திட்டமிட்டுள்ளார்.

பிரித்தானியாவில் குறைந்தபட்ச ஊதியத்தை உயர்த்த பிரதமர் போரிஸ் ஜான்சன் திட்டமிட்டுள்ளார் என்று தகவல்கள் வெளிவந்துள்ளன. இதனால் பொதுமக்கள் ஆண்டுக்கு ஆயிரம் பவுண்டுகள் வரை வருமானம் ஈட்ட முடியும் என்று கூறப்படுகிறது. அதிலும் பிரித்தானியாவில் 8. 91 பவுண்டுகள் குறைந்தபட்ச ஊதியமாக வழங்கப்பட்டு வருகிறது. தற்பொழுது இது 9.42 பவுண்டுகளாக உயரும் என தகவல்கள் வெளியாகியுள்ளது. இதனால் ஆண்டுக்கு 5.7 லட்சம் பேர் ஊதிய உயர்வைப் பெறுவார்கள்.

மேலும் வாரத்திற்கு 35 மணி நேரம் பணிபுரியும் ஒருவருக்கு ஆண்டுக்கு 928 பவுண்டுகள் கூடுதலாக இனிமேல் கிடைக்கப்பெறும். இதனை அடுத்து குறைந்தபட்ச ஊதியமாக ஒரு மணி நேரத்திற்கு 10 பவுண்டுகள்  உறுதி செய்யப்பட்டுள்ளன. இந்த குறைந்தபட்ச ஊதிய உயர்வானது பிரித்தானிய ஊழியர்களுக்கு பெரும் பலனைக்கிட்டும். இருப்பினும் இது ஒருவரின் வயதை கணக்கில் கொண்டே மாறுபடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் 16 வயது மேற்பட்டவர்களுக்கு பலன் உள்ளது. இது பகுதி நேர வேலை செய்பவருக்கும் பொருந்தும். தற்பொழுது பிரித்தானியாவில் 23 வயது மேலானோருக்கு 8.9 1 பவுண்டுகளும்  21 அல்லது 22 வயது உடையவர்களுக்கு 8.36 பவுண்டுகளும் அளிக்கப்படுகிறது. இதனை தொடர்ந்து 21 வயதுக்குள்ளானவர்களுக்கு 6.56 பவுண்டுகளும்  18 வயதுக்குட்பட்டவர்களுக்கு 4.62 பவுண்டுகளும் குறைந்தபட்ச ஊதியமாக கொடுக்கப்பட்டு வருகிறது.

Categories

Tech |