வாக்குச்சாவடியில் பணிபுரிந்த ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்களுக்கு ஊதியம் வழங்காததால் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள ரிஷிவந்தியம் ஊராட்சி ஒன்றியத்தில் காத்திருப்போர் பட்டியலில் ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் சிலரின் பெயர் ஊதிய வழங்குவதற்கான பட்டியலில் விடுபட்டிருப்பதாக கூறப்படுகின்றது.
இதனால் கோபமடைந்த ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனையடுத்து அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியத்தில் அலுவலர்கள் கலெக்டர் அலுவலகத்தில் அனுமதி பெற்று ஊதியம் வழங்கப்படும் என உறுதி அளித்ததால் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றுள்ளனர்.