ஓட்டுனர் உரிமம் இன்றி 20 ஆண்டுகளாக வாகனம் ஓட்டுபவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
சுவிட்சர்லாந்து நாட்டில் லூசர்ன் நகரில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அந்த சமயத்தில் அப்பகுதியில் வேகமாக சென்ற ஒரு காரை நிறுத்தி சோதனையிட்டனர். அந்த சோதனையில் காரை ஓட்டிச்சென்ற அறுபது வயதுடைய நபர் குடிப் போதையில் இருப்பதாக நினைத்த போலீசார் அவரை விசாரித்துள்ளனர்.
இந்த நிலையில் அவரிடம் மேற்கொண்ட விசாரணையில் கடந்த இருபது வருடங்களாக ஓட்டுநர் உரிமம் இன்றி அவர் வாகனம் ஓட்டுவது தெரியவந்துள்ளது. இதனை அடுத்து போலீசார் அவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.