Categories
Uncategorized நீலகிரி மாவட்ட செய்திகள்

ஊட்டி கேரட்டிற்கு போதுமான விலை – வியாபாரிகள் மகிழ்ச்சி..!!

நீலகிரி மாவட்டத்தில் நீண்ட இடைவெளிக்கு பிறகு ஒரு கிலோ கேரட் 90 விலை போவதால் அங்குள்ள விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

மலை மாவட்டமான நீலகிரியில் தேயிலைக்கு அடுத்ததாக மலை காய்கறிகள் அதிக அளவில் சாகுபடி செய்யப்படுகின்றன. அவற்றில் கேரட் குறிப்பிடத்தக்க ஒன்றாகும். கொரோனா ஊரடங்கால்  கடந்த சில மாதங்களாக கேரட் விலை கடுமையாக சரிந்து இருந்த நிலையில் தற்போது ஊட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கிலோ 90 ரூபாய் வரை விலை போகிறது.

உதகையின் சுற்றுவட்டார பகுதிகளில் விளையும் நிலங்களுக்கே  வந்து கிலோ 70 ரூபாய் முதல் 90 ரூபாய் வரை வியாபாரிகள் கேரட்டை வாங்கி செல்வதால் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இதேபோல் உருளைக்கிழங்கிற்கும்  போதிய விலை கிடைப்பதால் நீலகிரி மாவட்டம் விவசாயிகள் உற்சாகம் அடைந்துள்ளனர்.

Categories

Tech |