மலைப்பாதையில் பஸ் டிரைவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டும் சாமர்த்தியமாக பஸ்யை ஓட்டியதால் பயணிகள் உயிர் தப்பினர்.
திருப்பூர் மாவட்டம் உடுமலையில் இருந்து நீலகிரி மாவட்டம் ஊட்டிக்கு நேற்று காலை அரசு பஸ் ஒன்று புறப்பட்டு சென்றது. பஸ்சில் 64 பயணிகள் இருந்தனர். பஸ்சை டிரைவர் சின்னசாமி என்பவர் ஓட்டினார். பிற்பகல் 2.30 மணியளவில் காட்டேரி பகுதியில் பஸ் சென்ற போது பலத்த மழை பெய்தது. இந்நிலையில் திடீரென டிரைவர் சின்னசாமிக்கு நெஞ்சுவலி ஏற்பட்டது.
வலியால் துடித்த அவர் வழியை பொருட்படுத்தாமல் சிரமத்துடன் கொட்டும் மழையிலும் பஸ்சை சாமர்த்தியமாக ஒட்டி குன்னூர் வரை பயணிகளை கொண்டு சேத்தார். இதையடுத்து நெஞ்சு வலி ஏற்பட்ட டிரைவர் கோவை அரசு மருத்துவமனையில் சிகிசிச்சைபெற்று வருகிறார். இவர் சாமத்தியமாக பஸ்யை இயக்கியதால் 64 பயணிகளின் உயிர் தப்பினர்.