உதகைமண்டல கோடை விழாவை மாவட்ட ஆட்சியர், இன்னசென்ட் திவ்யா இன்று தொடங்கி வைத்தார்.
உதகை , அரசு தாவரவியல் பூங்காவில் 123வது மலர் கண்காட்சி வரும் 17ம் தேதி முதல் 21ம் தேதி வரை நடைப்பெறவுள்ளது . இதற்கான முன்னேற்பாடுகளான ,மலர் தொட்டிகளை அடுக்குதல் போன்றவற்றையும் கோடைகால விழாவையும் இன்று மாவட்ட ஆட்சியர் துவக்கி வைத்தார்.
123வது மலர் கண்காட்சியை , தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் துவக்கி வைக்க உள்ளார். மொத்தம் 15 ,000தொட்டிகளில் 200க்கும் மேற்பட்ட வகையான மலர்கள் காட்சிபடுத்தப்பட உள்ளன.