Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

கோவிலுக்கு சென்ற குடும்பத்தினர்… திரும்பி வந்த போது காத்திருந்த அதிர்ச்சி…!!

ஓய்வு பெற்ற ஆசிரியர் வீட்டில் மர்ம நபர்கள் பணம் மற்றும் நகைகளை கொள்ளையடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நாமக்கல் மாவட்டத்தில்  உள்ள தண்டாயுதபாணி லே-அவுட் பகுதியை சேர்ந்தவர் ராஜேந்திரன். இவர் முதுநிலை ஆசிரியர் பணியிலிருந்து ஓய்வு பெற்றுள்ளார். சம்பவத்தன்று ராஜேந்திரன் தனது குடும்பத்தினருடன் மதுரைக்கு  சென்றுள்ளார். அங்கு சாமி தரிசனம் செய்து விட்டு இரவு 7 மணி அளவில் குடும்பத்தினருடன் வீட்டிற்கு திரும்பியுள்ளார். அப்போது  அவரது வீட்டு கதவின்  பூட்டு உடைக்கப்பட்டிருந்தது .மேலும் மெயின் கதவும்  உடைக்கப்பட்டிருந்தது.

இதனால் அதிர்ச்சி அடைந்த ராஜேந்திரன் உள்ளே சென்று பார்த்தபோது வீட்டினுள் இருந்த இரண்டு பீரோக்களும்  உடைக்கப்பட்டிருந்தது . அதில் ஒரு பீரோவில் வைத்திருந்த 1,38,000 ரூபாயும் மற்றொரு பீரோவில் வைக்கப்பட்டிருந்த  12 1/2 பவுன் நகைகளும்  திருடு போயிருந்தது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த ராஜேந்திரன் கொள்ளை சம்பவம் குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அவர் அளித்த புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டவர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.

Categories

Tech |