கரூர் மாவட்டத்தில் நேற்று தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கலந்துகொண்டார். அங்கு பூமி பூஜை, புதிய கட்டடங்கள் திறப்பு விழா மற்றும் அம்மா கிளினிக் திறப்பு விழா போன்ற நிகழ்ச்சிகளில் பங்கேற்றார்.
நேற்று காலை அரவக்குறிச்சி அருகே உள்ள கோவிலூர் பகுதியில் அம்மா மினி கிளினிக் திறந்து வைத்துள்ளார். தொடர்ந்து நேற்று மாலை கிருஷ்ணராயபுரம் சட்டமன்ற தொகுதியில் சனபிரட்டி தொழில்பேட்டை பகுதியில் புதிய துணை மின் நிலையத்தை திறந்து வைத்தார். தொடர்ந்து அம்மா சமுதாய கூட்டத்திற்கான பூமி பூஜையில் கலந்துகொண்டார்.
இதனைத்தொடர்ந்து நேற்று இரவு தோகமலை அருகே உள்ள கொசூர் பகுதியில் அம்மா மனி கிளினிக்கை திறந்துவைத்தார். அவர் திறந்து வைத்த பத்து நிமிடங்களில் கிளினிக் பகுதியில் உள்ள தடுப்பு சுவர் ஒன்று இடிந்து விழுந்ததாக கூறப்படுகிறது. மேலும் அப்பகுதியில் நின்று கொண்டிருந்த சிலருக்கு காயம் ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது. அமைச்சர் திறந்து வைத்த சில நிமிடங்களில் அப்பகுதியில் ஏற்பட்ட விபத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.