கொரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் மேலும் இரண்டு வாரங்களுக்கு ஊரடங்கு நீடிக்கப்பட்டுள்ளது. மே 17ஆம் தேதி வரை ஊரடங்கு நீடிக்கப்பட்டுள்ளது குறித்து மத்திய உள்துறை அமைச்சகம் புதிய நெறிமுறைகளை வழங்கியுள்ளது. அதில், நாடு முழுவதும் 130 மாவட்டங்ள் சிவப்பு மண்டலமாகவும், 284 மாவட்டங்ள் ஆரஞ்சு மண்டலமாகவும், 119 மாவட்டங்கள் பச்சை மண்டலமாகவும் பிரிக்கப்பட்டுள்ளது.
மேலும் 2 வாரங்களுக்கு சாலை, ரயில், விமான போக்குவரத்து சேவைகள் இல்லை.பள்ளி, கல்லூரிகள், வழிபாட்டுத்தலங்கள் தொடர்ந்து மூடப்பட்டிருக்கும்.அத்தியாவசியம் அல்லாத சேவைகளுக்கு அனுமதி கிடையாது. கொரோனா பாதிப்பில்லாத பச்சை மண்டலங்களில் மதுக்கடைகள், பீடா கடைகளைத் திறக்கலாம் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.