சென்னையில் டாஸ்மாக் திறப்பு மதுபான கடைகளை திறப்பது தொடர்பாக டாஸ்மாக் நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது.
ஊரடங்கு தளர்வு அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தமிழகத்தில் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் சென்னை தவிர மற்ற இடங்களில் டாஸ்மாக் திறப்பதற்கு அரசு அனுமதி கொடுத்தது. சென்னையில் மதுபானக் கடைகளைத் திறப்பதற்கு அனுமதி தரப்படவில்லை. இந்நிலையில் சென்னையில் விரைவில் மதுபான கடைகள் திறக்கப்படும் என்ற செய்தி வெளியாகியது
இதுகுறித்து டாஸ்மாக் நிர்வாகம் தெரிவித்துள்ள விளக்கத்தில், சென்னையில் மதுபான கடைகளை திறப்பது குறித்து நாங்கள் இதுவரை எந்த முடிவையும் எடுக்கவில்லை என்று தெரிவித்து டாஸ்மாக் நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது.