தமிழகத்தில் நாளை முதல் சில நிபந்தனைகளுடன் டாஸ்மாக் மதுபான கடைகள் திறக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. டாஸ்மாக் மதுக்கடைகள் நாளை திறக்கப்பட உள்ள நிலையில் கூட்டத்தை கட்டுப்படுத்த காவல்துறை நடவடிக்கை எடுத்துள்ளனர். அதன்படி நாளை முதல் மதுபானக் கடைகள் தொடங்க உள்ள நிலையில் பாதுகாப்பு விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளது. அதில்,
- ஒவ்வொரு கடைக்கும் தலா 2 காவலர்கள், 2 ஊர்க்காவல் படையினர், 1 தன்னார்வலர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்த தமிழக அரசு உத்தரவிட்டது.
- ஒவ்வொருவருக்கும் இடையே 6 அடி இடைவெளியை உறுதி செய்ய வேண்டும்
- கூட்டத்தைப் பொறுத்து 3 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு பாதுகாப்பு தர வேண்டும்
- கடைக்கு அரை கி.மீ.க்கு முன்பாகவே மதுப்பிரியர்களின் வாகனங்களை நிறுத்தி விட்டு வரிசைப்படுத்த உத்தரவிட்டுள்ளனர்.
- அதிக கூட்டம் கூடும் மதுக்கடைகளில் ஒரு காவல் ஆய்வாளர் தலைமையில் கண்காணிக்க உத்தரவு
- ஒவ்வொருவருக்கும் டோக்கன் விநியோகம் செய்து மதுபாட்டில் வழங்க வேண்டும்
- 2 மணி நேரத்திற்கு ஒரு முறை பறக்கும் படையினர் ஆய்வு செய்ய வேண்டும்
- 10 மணி முதல் மதியம் ஒரு மணி வரை 50 வயதுக்கு மேற்பட்டோரை மட்டுமே அனுமதிக்க வேண்டும்.
- 1 மணி முதல் மதியம் 3 மணி வரை 40 முதல் 50 வயதினரை அனுமதிக்கலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது.