ஸ்வீடன் நாட்டில் புதிய ஆடம்பரமான மிதக்கும் ஹோட்டல் ஒன்று திறக்கப்பட்டுள்ளது அங்குள்ள மக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.
ஸ்வீடன் நாட்டில் மிதக்கும் மாளிகை (ஹோட்டல்) லூலே நதியில் வட்ட வடிவத்திலான அமைப்பைக் கொண்டுள்ளது. இந்த ஹோட்டலுக்கு மரத்தினால் தயார் செய்யப்பட்ட நடைபாதை வழியாக நாம் சென்றடைய முடியும்.
மேலும் ‘ஆர்க்டிக் பாத் (‘The Arctic Bath) எனும் இந்த மிதக்கும் ஹோட்டலின் நடுவில் மிகப்பெரிய ஐஸ் பாத் செய்யுமிடமும் உள்ளது.இந்த ஹோட்டல் கட்டடக் கலைஞர்களான பெர்டில் ஹார்ஸ்ட்ரோம் மற்றும் ஜோஹன் கவுப்பி ஆகியோரால் வடிவமைக்கப்பட்டது. இதில் 12 அறைகள் இருக்கின்றன. அனைத்துமே நீர் சூழ்ந்த நிலையில் தான் அமைக்கப்பட்டுள்ளன.
மேலும் இந்த ஹோட்டலின் ஸ்பெஷல் என்னவென்றால் யோகா, தியானம் ஆகியவற்றுக்கான தனி இடமும் இருக்கின்றன. அது மட்டுமில்லாமல் குதிரை சவாரி மற்றும் வனவிலங்கு காட்சிகள் உள்ளிட்டவைகளுக்கான இடங்களும் இங்கு உள்ளன. இந்த பிரம்மாண்ட விசித்திரமான ஹோட்டல் அனைவரையும் கவர்ந்துள்ளது.