தமிழகத்தில் 1ஆம் வகுப்பு முதல் 8ஆம் வகுப்பு வரை திறப்புக்கான அறிவிப்பை தமிழக அரசு வெளிட்டுள்ளது.
மருத்துவ நிபுணர்கள் கல்வியாளர்கள் பெற்றோர்களுடைய ஆலோசனைப்படிதான் 9 10 12 ஆம் வகுப்புக்கான மாணவர்களுக்கு பள்ளிகளுக்கும் கல்லூரிகளுக்கும் என்பதற்கான அனுமதி வழங்கப்பட்டு இருக்கிறது. அதேபோல் ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை பயிலும் மாணவ மாணவியர்கள் பள்ளிக்கு செல்லாமல் பல மாதங்களாக வீட்டில் இருப்பது அவர்களுக்கு பெரும் மன அழுத்தத்தையும், சமுதாயத்தில் பெரும் கற்றல் இடைவெளியையும், இழப்பையும் ஏற்படுவதாக மருத்துவ வல்லுநர்கள், கல்வியாளரும், பெற்றோரும் தெரிவித்து வருகிறார்கள்.
அந்த அடிப்படையில்தான் அனைத்து பள்ளிகளும் 1ஆம் வகுப்பு முதல் 8ஆம் வகுப்பு வரை மாணவ மாணவியருக்கு வகுப்புகள், அதனுடைய வழிகாட்டு நெறி முறைப்படி நடத்தவேண்டும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. அதே போல தமிழகத்தில் 31.10.2021ஆம் தேதி காலை 6மணி வரை ஊரடங்கு பின்பற்றப்படும் எனவும் தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது.
முன்னதாக நேற்று காலை கொரோனா பரவல், ஊரடங்கு, கட்டுப்பாடுகள் போன்ற பல்வேறு விஷயங்கள் குறித்து தமிழக முதல்வர் தலைமை செயலகத்தில் ஆலோசனை நடத்தினார். முதல்வர் தலைமையில் நடந்த இந்த ஆலோசனையில் மருத்துவ நிபுணர்கள், கல்வியாளர்கள், அரசு அதிகாரிகள் பங்கேற்ற நிலையில் மேற்கண்ட இந்த முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன.