அங்கன்வாடி மையங்களை திறப்பது குறித்து ஜனவரி-31 ஆம் தேதிக்குள் முடிவெடுக்க வேண்டுமென மாநில/ யூனியன் அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ள்ளது.
மகாராஷ்டிர மாநிலத்தை சேர்ந்த தீபிகா ஜகத்ராம் சகானி என்ற பெண் ஒருவர் உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்துள்ளார். அதில் கொரோனா வைரஸ் காரணமாக நாடு முழுவதும் அங்கன்வாடி மையங்கள் பல மாதங்களாக மூடப்பட்டிருக்கிறது. இதன் காரணமாக ஏழை கர்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மார்கள், குழந்தைகள் ஆகியோருக்கு ஊட்டச்சத்து மிக்க உணவு கிடைக்காத நிலை ஏற்பட்டதால் உடனடியாக அங்கன்வாடி மையங்களை திறக்க மாநில / யூனியன் அரசுகளுக்கு உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
மேலும் சமைத்த சூடான உணவு, வீட்டுக்கு செல்லும் வகையிலான ரேஷன் பொருட்கள் ஆகியவற்றை வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தியிருந்துள்ளார். இந்த வழக்கை நவிசாரித்த நீதிபதிகள் அங்கன்வாடி மையங்கள் திறப்பது குறித்து அனைத்து மாநில /யூனியன் பிரதேச அரசுகள் ஜனவரி 31-ம் தேதிக்குள் ஆலோசித்து முடிவெடுக்க வேண்டும். நோய் கட்டுப்பாட்டு பகுதி தவிர மற்ற பகுதிகளில் திறக்க நடவடிக்கை எடுக்கலாம். குறிப்பாக மாநில பேரிடர் மேலாண்மை ஆணையத்தோடு ஆலோசனை செய்த பிறகு சம்பந்தப்பட்ட மாநில/யூனியன் பிரதேச அரசுகள் முடிவெடுக்க வேண்டும். இது தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டு உரிய முறையில் பின்பற்ற வேண்டும் என்று.கூறப்பட்டுள்ளது