தமிழகத்தில் வழிபாட்டு தளங்களை திறப்பது குறித்து தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஆர்.கே ஜலீல் என்பவர் சென்னை உயர்நீதிமன்றம் தாக்கல் செய்த மனுவில், மக்கள் மனதில் குழப்பம் வரும்போதும், மன ஓட்டத்திற்கு நினைவு நிறைவான நிம்மதிக்காக தான் கோயில், மசூதி சர்ச் போன்ற மாதவழிபட்டு தலங்களுக்கு செய்கிறார்கள். இந்த நிலையில் தற்போது பல்வேறு மத வழிபாட்டு தளங்கள் முழுமையாக மூடப்பட்டிருக்கின்றன. ஆனால் அரசின் நிதிநிலைமை கருத்தில் கொண்டு சில கடைகளை திறக்க அனுமதித்திக்கப்பட்டுள்ளது. எனவே மக்களின் மனநிலையை கருத்தில் கொண்டு வழிபாட்டு தளங்களை திறக்க வேண்டும் என்ற கோரிக்கை வைத்திருந்தார்.
இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த போது,ஊரடங்கு மே 17ல் முடிவடைய உள்ளதால் 15 அல்லது 16 முடிவெடுக்க வாய்ப்பு இருப்பதாக மத்திய மாநில அரசு வால்;வழக்கறிஞ்சர்கள் தெரிவித்தன. அதே போல டாஸ்மார்க் கடைகள், கோயம்பேடு மார்க்கெட்டில் மக்கள் கூடுவதால் ஏற்பட்ட பாதிப்புகளை மக்கள் உணரவேண்டும் என்று தெரிவித்த தமிழகத்தில் வழிபாட்டு தளங்களை திறப்பது குறித்து தமிழக அரசு பதிலளிக்க உத்தரவிட்டுள்ளது.