Categories
அரசியல் மாநில செய்திகள்

“வெளிமாநிலங்களுக்கு செல்லும் மக்களின் நடமாட்டத்தை கட்டுப்படுத்தவே “இந்த முடிவு.!!

தமிழகத்தில் வருகிற 7ம் தேதி முதல் சில நிபந்தனைகளுடன் டாஸ்மாக் மதுபான கடைகள் திறக்க முடிவு செய்துள்ளதாக தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டது. மேலும் கொரோனா நோய்த்தொற்று வேகமாக பரவும் நிலையில் சென்னை காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்படாது என தமிழக அரசு அறிவித்துள்ளது.

இந்த காலகட்டத்தில் மதுக்கடைகளை  திறப்பதற்கு பல அரசியல் கட்சியினர், சமூக ஆர்வலர்கள் மற்றும் மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் இதுகுறித்து வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை  அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்  கூறுகையில்; தமிழகத்தில் மதுக்கடைகளை திறப்பது தீர ஆலோசித்து, ஆராய்ந்து எடுக்கப்பட்ட முடிவு ஆகும்.  வெளிமாநிலங்களுக்கு செல்லும் மக்களின் நடமாட்டத்தை கட்டுப்படுத்தவே, தமிழகத்தில் மதுபானக்கடைகளை திறக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

Categories

Tech |