அதிமுக கட்சியில் உட்கட்சி பூசல்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. முன்னாள் முதல்வர்கள் ஓபிஎஸ் மற்றும் எடப்பாடி ஆகியோர் தலைமையை கைப்பற்றுவதில் தீவிரம் காட்டி வருகின்றனர். எடப்பாடி பழனிச்சாமி இடைக்கால பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு ஓபிஎஸ் மற்றும் அவரின் ஆதரவாளர்களை கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவி உள்பட அனைத்து பதவிகளிலிருந்தும் நீக்கி உத்தரவிட்டார். ஆனால் தேர்தல் ஆணையம் மற்றும் நீதிமன்றம் எடப்பாடி பழனிச்சாமியின் இடைக்கால பொதுச் செயலாளர் பதவியை ஏற்றுக்கொள்ள முடியாது என்று கூறியதோடு பொதுச் செயலாளர் தேர்தலை நடத்துவதற்கும் நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.
இது இபிஎஸ் தரப்புக்கு பின்னடைவாக அமைந்த நிலையில், ஓபிஎஸ் அதை பயன்படுத்திக் கொண்டு அதிமுக கட்சியில் புதிய நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்களை சேர்ப்பதில் தீவிரம் காட்டி வருகிறார். ஓபிஎஸ்-ன் அடுத்தடுத்த டுவிஸ்ட் நடவடிக்கைகளை இபிஎஸ் தரப்பால் கண்டு பிடிக்கவே முடியவில்லை என்று அரசியல் வட்டாரத்தில் கூறப்படுகிறது. இந்நிலையில் தென் மாவட்டங்களில் உள்ள அமுமுக கட்சி நிர்வாகிகளிடம் கட்சி செலவுக்கு போதுமான அளவு பணத்தை டிடிவி கொடுப்பதில்லை என்று பேச்சு அடிபட்டுள்ளது.
இதை தெரிந்து கொண்ட எடப்பாடி தரப்பு அமுமுக ஆபரேஷன் என்ற திட்டத்தை எடப்பாடியிடம் கூறி நாம் அந்த பக்கத்தில் இருப்பவர்களை இந்த பக்கம் இழுத்து வரலாம் என்று ஐடியா கொடுத்துள்ளனர். ஆனால் எடப்பாடி டிடிவி தினகரன் ஒரு மாதிரியான ஆளு அவரிடம் வம்பிழுக்க வேண்டாம் என்று கூறியதாக சொல்லப்படுகிறது. ஆனால் மூத்த நிர்வாகிகளோ எடப்பாடி பழனிச்சாமியை கட்டாயப்படுத்தி அமமுக ஆபரேஷன் திட்டத்தை செயல்படுத்தியுள்ளனர்.
இதனையடுத்து உதயகுமார் தரப்பிலிருந்து தென் மாவட்டத்தைச் சேர்ந்த அமமுக கட்சியின் முக்கிய நிர்வாகிக்கு ஒரு தொலைபேசி அழைப்பு சென்றுள்ளது. அவரிடம் எடப்பாடியார் உங்கள் மீது தனி பாசம் வைத்திருக்கிறார் என்று கூற, அவரோ டிடிவி உங்கள் மீது டம்மியான பாசத்தை தான் எடப்பாடி வைத்திருக்கிறார் என்று அடிக்கடி கூறி வருத்தப்படுகிறார் என்று கூறியுள்ளார்.
அதன் பிறகு அதிமுக நிர்வாகி கொஞ்சம் ஃப்ரீயா இருந்தா வாங்க மீட் பண்ணலாம் என்று கூறியுள்ளார். அதற்கு அமமுக நிர்வாகி நாம போன்ல பேசுறது எல்லாமே ரெக்கார்ட் ஆகிட்டு இருக்கு நான் மக்கள் நிர்வாகிக்கு அனுப்பவா என்று கேட்க உடனே பயந்து போய் போனை வைத்து விட்டாராம். மேலும் தென் மாவட்டத்தில் உள்ள அரசியல்வாதிகள் இதை பேசி சிரித்துக் கொள்வதாக அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது.