நடிகை ரோஜாவுக்கு மருத்துவமனையில் ஆபரேஷன் நடந்து முடிந்துள்ளது.
தமிழ் திரையுலகில் வெளியான செம்பருத்தி திரைப்படத்தின் மூலமாக நடிகையாக அறிமுகமானவர் ரோஜா. இதைத் தொடர்ந்து அவர் நடித்த உழைப்பாளி, வீரா, என் ஆச ராசாவே, ராஜ முத்திரை உள்ளிட்ட பல படங்கள் பிளாக்பஸ்டர் ஹிட் ஆனது. இவர் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு திரையுலகிலும் பல படங்களில் நடித்துள்ளார்.
இவர் தற்போது ஆந்திராவில் எம்எல்ஏவாக இருக்கிறார். இந்நிலையில் நடிகை ரோஜாவுக்கு சில நாட்களுக்கு முன்பு கர்ப்பப்பையில் பிரச்சினை ஏற்பட்டுள்ளது. இதனால் அவரை மருத்துவமனையில் அனுமதித்தனர். அதில் அவரது கர்ப்பப்பையில் கட்டி இருப்பது உறுதியானது. இதனால் அவருக்கு தற்போது கர்ப்பப்பை ஆபரேஷன் நடைபெற்றுள்ளது.
இதுகுறித்து ரோஜாவின் கணவரும், டைரக்டருமான ஆர்.கே.செல்வமணி கூறியதாவது, ரோஜாவுக்கு இரண்டு ஆபரேஷன்கள் முடிந்துள்ளது. இந்த ஆபரேஷன்கள் கடந்த வருடமே செய்திருக்க வேண்டியது. ஆனால் தாமதமானதால் தற்போது ரோஜாவிற்கு சற்று பாதிப்பு அதிகமாகி விட்டது.
ஆனால் எல்லோருடைய பிரார்த்தனையாலும், கடவுளின் அருளாலும் அவருக்கு ஆபரேஷன் நல்லபடியாக முடிந்து உள்ளது. ஆனால் அவரை இரண்டு வாரங்களுக்கு பார்வையாளர்கள் யாரும் சந்திக்க வேண்டாம் என்று மருத்துவர்கள் கூறியுள்ளனர். ஆகையால் தயவு செய்து ரோஜாவை காண யாரும் ஆஸ்பத்திரிக்கு வரவேண்டாம் என்று கூறியுள்ளார்.