Categories
மாநில செய்திகள்

“ஆப்ரேஷன் மின்னல்” ஓடிப் போன ரவுடிகள் ஐஜி வீட்டில் திருடினார்களா….? இபிஎஸ் சரமாறி கேள்வி….!!!!!

தமிழகத்தில் ஆபரேஷன் மின்னல் என்ற திட்டத்தின் மூலம் மூலம் ரவுடிகள் கைது செய்யப்படுவதாக தமிழக டிஜிபி சைலேந்திரபாபு அறிவித்துள்ளார். இதுகுறித்து தற்போது எதிர்க்கட்சித் தலைவர் இபிஎஸ் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் தமிழக டிஜிபி சைலேந்திரபாபு அவர்கள் ஆப்ரேஷன் மின்னல் திட்டத்தின் மூலம் ரவுடிகள் கைது செய்யப்படுவதாக அறிவித்துள்ளார். இந்தத் திட்டத்தின் மூலம் 72 மணி நேரத்தில் 3905 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக டிஜிபி கூறியுள்ளார். கடந்த 16 மாதங்களில் திமுக ஆட்சிப் பொறுப்பை ஏற்றதில் இருந்து சட்டம் ஒழுங்கு அடியோடு சீர்குலைந்து விட்டது. கொலை, கொள்ளை, திருட்டு, வழிப்பறி, பாலியல் பலாத்காரங்கள், போதைப் பொருள்கள் புழக்கம் போன்றவைகள் அதிகரித்து விட்டது. இதனால் பொதுமக்களும், பெண்களும் வீதிகளில் நடமாட முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

ஆனால் டிஜிபி ஆபரேஷன் மின்னல் திட்டத்தின் மூலம் ரவுடிகள் கைது செய்யப்படுவதாக அறிக்கை வெளியிட்டுள்ளார். 705 கைதிகள் சிறையில் இருப்பதாகவும், 2390 ரவுடிகளிடம் உறுதிமொழி பத்திரம் வாங்கிவிட்டு வெளியே விட்டதாகவும் கூறியுள்ளனர். அதோடு ஆபரேஷன் மின்னல் திட்டத்திற்கு பயந்து ரவுடிகள் வெளி மாநிலத்திற்கு தப்பி ஓடியதாகவும் கூறுகிறார்கள். இது தொடர்பான செய்தியை தமிழக மக்கள் படித்துக் கொண்டிருக்கும் போதே ஊத்துக்கோட்டை பகுதியில் உள்ள வடக்கு மண்டல ஐஜி வீட்டில் திருட்டு சம்பவம் அரங்கேறி உள்ளது. அந்த வீட்டிற்குள் புகுந்த திருடர்கள் நகை, பணம், ஹார்டிக்ஸ் போன்ற பல்வேறு பொருட்களை திருடிய உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

ஆப்ரேஷன் மின்னலால் பயந்து வெளிமாநிலத்திற்கு ஓடிப்போன ரவுடிகள் 24 மணி நேரத்திற்குள் எப்படி திரும்ப வந்து ஐஜி வீட்டில் திருடினார்கள் என்பது தெரியவில்லை. 2390 ரவுடிகளிடம் உறுதிமொழி பத்திரம் வாங்கியுள்ளதாக கூறிய காவல்துறையினர் அவர்களை தங்களுடைய கண்காணிப்பின் கீழ் வைத்துள்ளார்களா என்று தெரியவில்லை. அதோடு உறுதிமொழி பத்திரம் வாங்கிக் கொண்டு ரவுடிகளை சுதந்திரமாக நடமாட விட்டதன் மர்மம் என்பது குறித்து காவல்துறை விளக்கம் அளிக்க வேண்டும். மேலும் இனியாவது சட்டம் ஒழுங்கை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க வேண்டும் என காவல்துறைக்கு பொறுப்பு வகிக்கும் முதல்வர் ஸ்டாலினுக்கு வலியுறுத்திக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.

Categories

Tech |