Categories
உலக செய்திகள்

முக்கிய நாடுகளின் ஒப்பந்தம்…. நாடாளுமன்றத்தில் எழுப்பப்பட்ட கேள்வி…. பிரதமரின் அதிரடி பதில்….!!

 

பிரான்சுடன் தனது நாட்டின் உறவு மிகவும் வலிமையாக உள்ளது என்று இங்கிலாந்து நாட்டின் நாடாளுமன்றத்தில் பிரதமர் போரிஸ் ஜான்சன் கூறியுள்ளார்.

இங்கிலாந்து உட்பட 3 முக்கிய நாடுகள் AUKUS என்னும் பாதுகாப்பு வாய்ந்த ஒப்பந்தம் ஒன்றை ஆசிய பசுபிக் கடலில் போட்டுள்ளது. இவ்வாறு போடப்பட்டுள்ள ஒப்பந்தத்தை தொடர்ந்து AUKUS பாதுகாப்பு ஒப்பந்தத்தில் பங்கேற்றுள்ள 3 முக்கிய நாடுகளில் ஒன்றான ஆஸ்திரேலியா பிரான்ஸ் நாட்டுடனான நீர்மூழ்கி கப்பல் தொடர்பான ஒப்பந்தத்தை அதிரடியாக முடித்துள்ளது.

இதனையடுத்து ஆஸ்திரேலியாவின் இந்த அதிரடியான செயலால் பிரான்ஸ் அரசாங்கம் கடுமையாக கோபமடைந்துள்ளது. இவ்வாறான சூழ்நிலையில் இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் பிரதமர் போரிஸ் ஜான்சனிடம் பிரான்ஸ் நாட்டிற்கும், இங்கிலாந்திற்குமிடையே உள்ள உறவு தொடர்பாக எழுப்பப்பட்ட கேள்விக்கு அவர் அதிரடியாக பதில் அளித்துள்ளார். அதாவது இருநாடுகளுக்கு இடையேயான உறவு மிகவும் வலிமையாகவுள்ளது என்று தெரிவித்துள்ளார்.

Categories

Tech |