ஒப்போ நிறுவனம் வாடிக்கையாளர்களுக்கு வழங்குவதற்காக 5ஜி சேவையின் சோதனையை முடித்துள்ளதாக தெரிவித்துள்ளது.
உலகம் முழுவதும் இருக்கும் ஸ்மார்ட்போன் உற்பத்தியாளர்கள் மற்றும் டெலிகாம் நிறுவனங்கள் 5ஜி சேவையை தொடங்க மிகுந்த ஆர்வம் காட்டி வருகின்றனர். இதற்காக அதிக அளவு முதலீடு செய்து ஆராய்ச்சிகள் பலவற்றை மேற்கொண்டு வருகின்றனர். இந்தியாவில் கூட ரியல், ஹைக்கூ நிறுவனங்கள் 5ஜி ஸ்மார்ட் போன்களை வெளியிட்டன.
இந்நிலையில் ஒப்போ நிறுவனம் முழுக்க முழுக்க 5g தொழில்நுட்பத்தில் இயங்கும் VONR எனப்படும் வாய்ஸ் மற்றும் வீடியோ கால் சோதனையை செய்து முடித்துள்ளது. இந்த VONR சேவையின் மூலம் வாடிக்கையாளர்களுக்கு தரமான ஒளி மற்றும் படம் தரம் வழங்கப்பட்டு சிறந்த அனுபவத்தை கொடுக்க உள்ளது.
இதுகுறித்து ஒப்போ நிறுவனத்தின் துணைத் தலைவர் கூறுகையில் “5ஜி தொழில்நுட்பத்தை வாடிக்கையாளர்களிடம் சேர்ப்பதில் மிகவும் தீவிரத்துடன் செயல்பட்டு வருகிறது ஒப்போ நிறுவனம். இந்த VONR சோதனைக்கு எரிக்சன் மற்றும் மீடியாடெக் எங்களுக்கு உதவி புரிந்தன.
5G சேவை வழங்க இந்த இரண்டு நிறுவனங்களுடன் கூட்டணி அமைத்து இருக்கிறோம். 5G தொழில்நுட்பத்தில் முன்னணியில் இருக்க வேண்டும் என்பதே எங்களின் முதல் நோக்கம் அதேநேரம் உலகத்தில் இருக்கும் அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் சிறந்த 5G அனுபவத்தை கொடுக்க தொடர்ந்து உழைத்து வருவோம்” என கூறியுள்ளார்.