Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் மதுரை, வேலூர் உள்ளிட்ட 4 மாவட்டங்களில் முழு ஊரடங்கு அமல்படுத்த வாய்ப்பு?

தமிழகத்தில் மதுரை, வேலூர் உள்ளிட்ட 4 மாவட்டங்களில் முழு ஊரடங்கு அமல்படுத்துவது குறித்து ஆலோசனை நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பானது அதிகரித்து வருகிறது. தமிழகம் முழுவதும் 59,377 பேர் கொரோனோவால் பாதிக்கப்பட்டுள்ளனர். குணமடைந்தவர்கள் மொத்த எண்ணிக்கை 32,754 ஆக அதிகரித்துள்ள நிலையில் 757ஆக உள்ளது. தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் சென்னை தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது.

சென்னையில் கொரோனா பாதித்தவர்கள் மொத்த எண்ணிக்கை 41,172 ஆக உயர்ந்துள்ளது. மேலும் சென்னைக்கு அருகாமையில் உள்ள திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களிலும் கொரோனா பாதிப்பானது அதிகரித்துள்ளது. இதனால் ஜூன் 19ம் தேதி முதல் ஜூன் 30ம் தேதி வரை முழு ஊரடங்கு உத்தரவானது பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் மதுரை, வேலூர், திருவண்ணாமலை, ராணிப்பேட்டை மாவட்டங்களில் முழு முடக்கம் அமல்படுத்தப்பட வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. வேலூர் மாவட்டத்தில் இதுவரை 477 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. மதுரையில் நேற்று ஒரே நாளில் 68 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளதால் மொத்த பாதிப்பானது 705ஆக உயர்ந்துள்ளது. ராணிப்பேட்டையில் இதுவரை 470 பேர் கொரோனோவால் பாதிக்கப்பட்டுள்ளனர். திருவண்ணாமலையில் 1,060 பேர் கொரோனோவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

Categories

Tech |