சில தளர்வுகளுடன் அடுத்த பொதுமுடக்கத்துக்கு வாய்ப்பு இருப்பதாக அமைச்சர் மா.பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.
வேகமாக பரவிவரும் கொரோனாவை கட்டுபடுத்த மத்திய அரசு 4 கட்டமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பித்துள்ளது. வருகின்ற 31ஆம் தேதி வரை ஊரடங்கு அமலில் இருக்கும் நிலையில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு, முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. தமிழகத்தில் 16,277 பேருக்கு தொற்று உறுதியாகி இந்தியாவிலே 2ஆம் இடத்தில தமிழகம் உள்ளது.
இந்த நிலையில் ஆவடியில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மா.பாண்டியராஜன், கொரோனவை பொறுத்தவரை தற்போது உள்ள சூழலில் நீடித்தால் சில தகவல்களுடன் அடுத்த பொதுமுடக்கத்துக்கு வாய்ப்பு உள்ளது என்று தெரிவித்தார்.
மேலும் அரசின் தவறான நடவடிக்கையால் கொரோனா அதிகரித்துள்ளது என்ற ஸ்டாலின் குற்றச்சாட்டு அமைச்சர் மறுப்பு தெரிவித்ததோடு, பிரசாந்த் கிஷோர் சொல்வதை கேட்டு செயல்படும் ஸ்டாலின் வெளியிலில் இறங்கி பார்வையிட்டால் அரசின் சாதனை புரியும் என்று தெரிவித்துள்ளார்.