Categories
சினிமா தமிழ் சினிமா

அடித்தது லக்… பிரபல நடிகருடன் ஜோடியாகும் சீரியல் நடிகை…!!

சின்னத்திரையில் கலக்கிய பிரபல நடிகை தற்போது வெள்ளித்திரையில் தொடர்ந்து நடிக்கும் வாய்ப்பை பெற்றுள்ளார்.

வாணி போஜன் தெய்வமகள் போன்ற பிரபல நாடகங்களில் நடித்து, சின்னத்திரையிலிருந்து வெள்ளித்திரைக்கு வந்தவர். இவர் நடிப்பில் வெளியான ஓ மை கடவுளே படம் செம்ம ஹிட் கொடுத்தது.இப்படம் தற்போது உலகத்திரைப்பட விழா வரைக்கும் செல்ல இருக்கிறது, இதனை அடுத்து வாணி போஜன் வைபவுடன் லாக்கப் என்ற படத்தில் நடித்தார்.

இந்த படம் தியேட்டரில் வெளியிடப்படாமல் தற்போது டிஜிட்டலில் வர இருக்கிறது. இதை தொடர்ந்து வாணி, விக்ரம் பிரபு நடிக்கும் ஒரு படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்க உள்ளார். இப்படத்தை புதுமுக இயக்குனர் ஒருவர் இயக்க இருக்கிறார் . இந்த படம் கண்டிப்பாக வாணி போஜனுக்கு மேலும் புகழை தேடி தரும் என எதிர்ப்பார்க்கப்பட்டு வருகிறது.

Categories

Tech |