சென்னை, கிண்டியில் ஆளுநர் பன்வாரிலால் புரோகித்திடம் எதிர்கட்சி தலைவர் பழனிசாமி, துணை தலைவர் பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் மனு அளித்தனர்..
தமிழக சட்ட பேரவையில் நேற்று பட்ஜெட் மீதான உரை தொடங்கிய போது, நேரமில்லா நேரத்தில் எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி கோடநாடு கொலை கொள்ளை விவகாரத்தில் தன்னையும், கழகப் பொறுப்பாளர்களையும் வழக்கில் சேர்க்க சதி நடப்பதாகவும் அவர் குற்றஞ்சாட்டியிருந்தார்.. இதற்கு முதலமைச்சர் மு க ஸ்டாலின் சட்ட சபையில் சட்டப்படியே விசாரணை நடைபெறும்.. யாரும் எதற்கும் அஞ்சத் தேவையில்லை.. முறையான விசாரணை நடத்தப்பட்டு குற்றவாளிகள் யார் என்று வெளிக்கொண்டு வரப்படும் என்று கூறியிருந்தார்..
அதிமுகவினர் கோடநாடு வழக்கை மீண்டும் விசாரிக்க எதிர்ப்பு தெரிவித்து பதாகைகளை ஏந்தி கோஷங்களை எழுப்பி சட்டசபையில் இருந்து வெளியேறி பின் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர்.. அப்போது பேசிய எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் என்னையும் சிலரையும் சேர்க்க சதி நடக்கிறது.. நீதிமன்ற உத்தரவு இல்லாமல் மீண்டும் விசாரணை நடத்துவது சட்டப்படி தவறானது.. என் மீதும், முன்னாள் அமைச்சர்கள் மீதும் வீண் பழி சுமத்த வழக்கு ஜோடிக்கின்றனர்.. எதிர்க்கட்சித் தலைவர் எனக்கே இந்த நிலை என்றால்.. சாதாரண மக்களின் நிலை என்ன?.. பொய் வழக்கு போட்டு எங்களை முடக்க நினைப்பது ஒரு போதும் நடக்காது என்று தெரிவித்தார்..
இந்த நிலையில் சென்னை, கிண்டியில் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் உடன் எதிர்கட்சி தலைவர் பழனிசாமி, துணை தலைவர் பன்னீர்செல்வம் சந்தித்து பேசி, கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு தொடர்பாக மனு அளித்தனர்.. அப்போது அமைச்சர்கள் வேலுமணி, தங்கமணி, ஜெயக்குமார் உடனிருந்தனர்..