திமுக அரசின் 100 நாட்களில் மக்கள் வேதனை அடைந்துள்ளனர் என்று எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமி தெரிவித்துள்ளார்..
சென்னை, கிண்டியில் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் உடன் எதிர்கட்சி தலைவர் பழனிசாமி, துணை தலைவர் பன்னீர்செல்வம் சந்தித்து பேசி, கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு தொடர்பாக மனு அளித்தனர்.. மனு அளித்த பின் ஈபிஎஸ் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு விசாரணை முடியும் தருவாயில் உள்ள நிலையில், மீண்டும் திமுக அரசு அந்த வழக்கை விசாரணை செய்கிறது. திமுகவின் 100 நாள் ஆட்சியில் மக்கள் வேதனையும், சோதனையும் தான் அடைந்துள்ளனர்.
அதிமுக ஆட்சியில் துவங்கிய திட்டங்கள் வேண்டும் என்றே முடக்கி உள்ளனர். திமுக முன்னாள் அமைச்சர்கள் மீதான வழக்குகள் நிலுவையில் உள்ளன.. எஸ்.பி. வேலுமணி, எம்.ஆர்.விஜயபாஸ்கர் மீது வேண்டுமென்றே வழக்கு போட்டுள்ளனர்.
கொரோனா தொற்றை கட்டுப்படுத்த முடியாததை மறைக்க பொய் வழக்கு போடுகிறது. பழிவாங்குவதை திமுக அரசு செய்து வருகிறது. ஊழியர்களை பணி இடமாற்றம் செய்தது தான் திமுக அரசின் 100 நாள் சாதனை..
திமுக அரசின் 100 நாட்களில் மக்கள் வேதனை அடைந்துள்ளனர்.. கடந்த ஆட்சியில் தொடங்கப்பட்ட பணிகளை தற்போதைய அரசு கிடப்பில் போட்டுள்ளது. 100 நாள் வேலை திட்டம் முறையாக செயல்படவில்லை, திமுக அரசு முடக்கியுள்ளது.
நீதிமன்றத்தில் நடைபெறும் வழக்கை தேர்தல் அறிக்கையில் தொடர்பு படுத்தக் கூடாது. கொடநாடு வழக்கில் கைதானவர்கள் கேரள மாநிலத்தைச் சேர்ந்தவர்கள்.. கொடநாடு வழக்கில் குற்றவாளிகளுக்கு ஆதரவாக திமுக வழக்கறிஞர் வாதாடினார்.. நீதிமன்றத்தில் அனுமதி பெறாமல் கோடநாடு வழக்கை மீண்டும் விசாரிக்கிறது திமுக அரசு..
அரசியல் காழ்ப்புணர்ச்சியோடு கொடநாடு வழக்கை கையில் எடுத்துள்ளது.. வெள்ளை அறிக்கை எடுபடாததால் கொடநாடு வழக்கை கையில் எடுத்துள்ளனர். நீட் தேர்வை ரத்து செய்வதாக அளித்த வாக்குறுதியை நிறைவேற்றவில்லை.. நீட் வழக்கில் பொய்யான கருத்தை மக்களிடம் கூறியுள்ளது திமுக.
கொடநாடு வழக்கை மீண்டும் விசாரிக்க நீதிமன்றத்தில் அனுமதி பெறவில்லை.. கொரோனாவை கட்டுபடுத்த முறையாக நடவடிக்கை எடுக்கவில்லை.. கொரோனா பாதிப்பு எண்ணிக்கை குறைந்து காட்டுகிறார்கள் என்று கூறினார்..